அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி கடுமையான பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு யாருக்காகவோ பரீட்சைகளின் திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாதெனவும், ஜனாதிபதி தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். இந்த ஆண்டும் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டதன் பிர நிலைமை உள்ளது. காரம் நடத்தப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகளை நடத்துவதற்கு பிள்ளை களுக்கு சுமை ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி தெரிவித்தார். பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதற்கு பாராளுமன்ற சட்டத்தினூடாக ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறும் கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரை யில் தெரிவித்தார்.
இந்த நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதினால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் பெறுவது. வயது வரம்பை தாண்டிச் செல்வது போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடுமென்று ஜனாதிபதியிடம் கல்வி நிபுணர்கள் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.