உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

இன்று வெள்ளிக்கிழமை (27/10/2023) எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக்கிண்ணம் 2023 ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 01 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 270 ஓட்டங்களைப் பெற்றது, இதில் அணி சார்பாக சௌத் ஷகீல் 52 ஓட்டங்களையும் (52 பந்துகளில்), பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் (65 பந்துகளில்), ஷதாப் கான் 43 ஓட்டங்களையும் (36 பந்துகளில்) ஆகியோர் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர்.

தென்னாப்பிரிக்க பந்து வீச்சு சார்பாக  தப்ரைஸ் ஷம்சி 10 பந்து பரிமாற்றங்கள் வீசி 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 09 பந்து பரிமாற்றங்கள் வீசி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 07 பந்து பரிமாற்றங்கள் வீசி 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

271 என்ற ஓட்டத்தை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சார்பாக எய்டன் மார்க்ரம் 91 ஓட்டங்களையும் (93 பந்துகளில்), டேவிட் மில்லர் 29 ஓட்டங்களையும் (33 பந்துகளில்) டெம்பா பவுமா 28 ஓட்டங்களையும் (27பந்துகளில்) ஆகியோர் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். 45.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவின் 09 ஆவது விக்கெட்டாக லுங்கி நிகிடி ஆட்டமிழக்க,  கேஷவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோரின் பொறுமையான ஆட்டத்தின் மூலம் 47.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா வெற்றி இலக்கை எட்டியது.

பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 03 விக்கெட்டுகளையும்  முகமது வாசிம், உஷாமா மீர் ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றி தென்னாப்பிரிக்காவிற்கு முக்கியமானதாக இருந்தது, ஏனெனில் இது தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கான போட்டியில் தென்னாப்பிரிக்காவை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும்.

Summary

  • Pakistan 270 (10 wickets, 46.4 overs)
  • South Africa 271 (9 wickets, 47.2 overs)

South Africa won by 1 wicket (16 balls left)

Player of the Match : Tabraiz Shamsi 4/60 (10) & 4* (6)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *