உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

இன்று வெள்ளிக்கிழமை (27/10/2023) எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக்கிண்ணம் 2023 ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 01 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 270 ஓட்டங்களைப் பெற்றது, இதில் அணி சார்பாக சௌத் ஷகீல் 52 ஓட்டங்களையும் (52 பந்துகளில்), பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் (65 பந்துகளில்), ஷதாப் கான் 43 ஓட்டங்களையும் (36 பந்துகளில்) ஆகியோர் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். தென்னாப்பிரிக்க பந்து வீச்சு…

மேலும் வாசிக்க

பஸ்ஸில் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் – சம்மந்தப்பட்ட மூவர் கைது!

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவர் குருநாகலிலிருந்து நிககொள்ளவுக்கு பஸ் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் போது பஸ்ஸிலேயே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி, நடத்துனர் உற்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரையும், அவருக்கு உதவியதாக கூறப்படும் பஸ் சாரதி மற்றும் நடத்துனரையும் கும்பகெட்டே பொலிஸார் கைது செய்துள்ளனர். குருநாகல் மஜிஸ் வர்த்தக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை…

மேலும் வாசிக்க