பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை  (13.10.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.

பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கல்விப் படிப்புக்கான கொடுப்பனவை உயர்த்துவது, வருமான வரியில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

நாட்டின் பொருளாதார நிலைமையை நிர்வாகம் உணர்ந்துள்ளதாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளை விரைவில் சரிசெய்து அனைத்து குடிமக்களுக்கும் உதவிகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி கல்விக் கற்கைகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தற்போதுள்ள சுற்றறிக்கைகளின் ஊடாக போதிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மூன்று வாரங்களுக்குள் தமக்கு அறிக்கை அளிக்குமாறும் தற்போதைய வரிக் கட்டணங்களில் இருந்து விலக்களிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை கலைக்குமாறும், கலிபோர்னியா மற்றும் பெய்ஜிங் பல்கலைக்கழக அமைப்புகளுக்கு பல்கலைக்கழக நிர்வாக செயல்பாடுகளை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி பரண ஜயவர்தன, செயலாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *