டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இருந்து வெளியேறிய பிறகு, புதன்கிழமை டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது உலகக் கோப்பை போட்டியையும் ஷுப்மான் கில் தவறவிடுவார் என பி.பி.சி.ஐ அறிவித்துள்ளது.
கில் அணியுடன் டெல்லிக்கு செல்ல மாட்டார் என்றும், “சென்னையிலேயே தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்” என்றும் பிசிசிஐ கூறியது.
ஆஸ்திரேலிய ஆட்டத்தில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “அவர் [கில்] நேற்றை விட இன்று நன்றாக உணர்கிறார், அதனால் அது ஒரு நேர்மறையான விடயம், ஆனால் மருத்துவக் குழு அவரை தினசரி அடிப்படையில் கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
கில் 72.35 சராசரி மற்றும் 105.03 ஸ்ட்ரைக் ரேட்டில் 1230 ரன்களுடன் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர். அவர் தனது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.
அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, அக்டோபர் 14 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்கிறது.