பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (13.10.2023) ஜனாதிபதி அலுவலகத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கல்விப் படிப்புக்கான கொடுப்பனவை உயர்த்துவது, வருமான வரியில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமையை நிர்வாகம் உணர்ந்துள்ளதாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளை விரைவில் சரிசெய்து அனைத்து குடிமக்களுக்கும் உதவிகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார். மேற்படி கல்விக் கற்கைகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தற்போதுள்ள சுற்றறிக்கைகளின் ஊடாக போதிய ஒதுக்கீடுகள்…