யாழ் போதனா வைத்தியசாலையில் உளநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பாதுகாப்பு ஊழியர்- மூவர் யாழ் பொலிசாரால் கைது (காணொளி)
இந்நிகழ்வு தொடர்பில் யாழ்.போதான வைத்தியசாலையில் இன்று (14.10.2023) உளநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாதுகாப்புப் ஊழியர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இணைக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டவுடன் பல தரப்பட்ட மக்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பு ஊழியரின் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்த மருத்துவ பீட மாணவி ஒருவரையும் தாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ மாணவியின் தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. சமீப நாட்களில், பாதுகாப்பு ஊழியர்கள் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்வையிட…