இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகளின் சம்மேளனத்தின் (IORA) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாடு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் புதன்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, இந்திய கடன் உதவித் திட்டத்தின் ஊடாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது. 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின்…